நடந்து முடிந்த பாராளுமன்ற தே தலில் காங்கிரஸ் சார்பில் முதன் முறையாக MP ஆக தேந்தெடுக்கப் பட்டிருக்கும், 57 வயதான திரு.கே.எஸ். அழகிரி , அவர்களுக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. இவர் தற்போது ஜெயித்துள்ள கடலூர் தொகுதியில் இவரை எதிர்த்து போட்டியிட்டு தோற்றுப் போன ,அதிமுக - எம்.சி. சம்பத், தே.மு.தி.க. - எம்.சி.தாமோதரன் ஆகிய இருவரும் உடன் பிறந்த சகோதரர்கள் என்பது சுவாரஸ்யமான விஷயம் . ஆக கழக உடன்பிறப்புகளின் உதவியோடு உண்மையான உடன் பிறப்புகளை வென்ற இவருக்கு அமைச்சர் ஆகும் வாய்ப்பு கிட்டுமா? இதற்கு முன் இரண்டு முறை சிதம்பரம் எம்.எல். ஏ ஆக இருந்தவர் என்ற தகுதியும் இவருக்கு உண்டு. அழகிரி அமைச்சர் ஆக வாழ்த்துவோம்!!!...
------------------------------------------------------------------------------------------------------------------------------
மேலே இன்னொரு படத்தில் இருப்பவர் திரு. மேத்யு ., மதுரை தேர்தல் பார்வையாளராக இருந்தவர், தேர்தல் முடிந்ததும் மற்ற பார்வையாளர்கள் அரசாங்க செலவில் விமானத்தில் ஊருக்கு சென்று விட்டனர். ஆனால் இவரோ மாட்டு தாவணி பஸ் ஸ்டாண்ட் போய், பஸ் பிடித்து சொந்த ஊர் திரும்பியிருக்கிறார். இவரை போன்றோரை வாழ்த்த வேண்டியது நம் கடமை அல்லவா ?
..................................--------------------------............................---------------------------------------
இன்னொரு செய்தியும் ஒரு நேர்மையான அதிகாரி பற்றியது தான், தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் திரு. நரேஷ் குப்தா வை , பா.ம.க. டாக்டர். ராமதாஸ் இவரை மாடு மேய்க்க போகலாம் என்று கூறியது. அரசியல் வாதிகள் , நேர்மையான அதிகாரிகளை இவ்வாறு விமர்சிக்கலாமா?
9 comments:
போர்களத்தில் அண்ணன் என்னடா தம்பி என்னடா என்று படயெடுக்கும் பொழுது....தேர்தல் களத்தில் உடன் பிறப்பாவது,ரத்தத்தின் ரத்தமாவது...
முதல்ல நான் கூட நம்ம அஞ்சாநெஞ்சன சொல்றீங்களோன்னு நினைச்சேன்.. நல்ல அரசியல் செய்திகள் நண்பா
எனக்கு கடலூர் மேட்டர் தெரியும் ஏன்னா நம்ம அந்த ஏரியா பக்கம் தான்..
அப்புறம் அந்த தேர்த அதிகரி மேட்டர் புதுசு..
நல்ல அரசியல் செய்திகள்..
போட்டி தேர்தலோடு இருந்தால் பரவாயில்லை.
குடும்ப உறவுகள் குலையாமல் நாகரீகமாக இருந்தால் நல்லது.
உறவுகளின் திருமணங்களுக்கும்,மரணங்களுக்குமே போகக்கூடாது என்ற அ(சிங்க)திமுக கொள்கை உறவுகளைக் கெடுத்து வைத்திருப்பது தமிழகத்தின் மானக்கேடு.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, கோமா, வினோத்,கார்த்திகை மற்றும் அனானி அவர்களே.
உங்க ஊர்ல பதிவர் சந்திப்புங்ளாம்... கால அவகாசம் வாய்ச்சா, ஒரு எட்டு போய்ட்டு வாங்க... இஃகிஃகி!!
நன்றி ,பழமை
யார் ஜெயிச்சாலும் தோத்தாலும் வீட்ல ஒரு MP ரெடி
எதிர் பாராத திருப்பங்களாக, இடுகைகள் இடும் பழக்கம் வாழ்க ! நல்லாருக்கு
Post a Comment