Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Sunday, September 13, 2009

வாடகை சைக்கிள்



பள்ளம், மேடு
காடு ,கழனி,
நீர் வற்றிய
ஆற்று மணல்வெளி ,
எல்லாவற்றையும்
நான் கடந்து செல்ல
உதவியது நீ !
நான் உயரங்களை
அடைய உதவிய
நீ, என் துயர
நேரங்களிலும்
உடனிருந்திருக்கிறாய் !
உன்னுடனே வெகு தூரம்
பயணித்தாலும்
நீ என்னுடையதில்லை ;
என் பயணம்
முடிந்த பின்
உன்னை
ஒப்படைத்து
செல்ல வேண்டும்

Wednesday, September 9, 2009

குடைக் கவிதை



கண்ணை பறிக்கும்

வண்ணங்கள் அதில்,

கையில் அடக்கி விடும்

வசதி அதில்,

, ஒரு நுனியில் இருட்டில்

ஒளி தரும் கைவிளக்கும்

உண்டு

, வெளி நாட்டு தயாரிப்பில்

வாங்கிய அந்த குடை

வண்ண மயமாய்,

வசதியாய்,

ஒளி விளக்காய்

, இருந்த போதிலும்,

மழையின் போது

குடையாய் மட்டும்

உபயோகிக்க

முடியவில்லை.

புலி பசித்தாலும்

புல்லை தின்னாது !

எலி பசித்தால்

குடையை தின்னுமா ?