
ஒரு ஆசிரியர் , மாணவர்களிடம் " கோபம் வந்தால் நாம் ஏன் சத்தமாக பேசுகிறோம் ? மக்கள் ஆத்திரத்தில் ஆவேசமாக உரத்த குரலில் பேசி சண்டை இட்டு கொள்வதேன் ? ,என்று கேட்டார்.
ஒரு மாணவன் எழுந்து , " கோபம் வரும் போது, நாம் அமைதியை இழந்து விடுகிறோம்,அதனால் கத்துகிறோம் " என்றான் .
" சரி, ஆனால் நம்மை கோபப் படுத்திய நபர் ,மிக அருகில் இருக்கும் போது , உரத்த குரலில் ,தடித்த வார்த்தைகளில் பேசுவதின் காரணமென்ன ? நாம் சொல்ல நினைப்பதை மெதுவான குரலில் ஏன் சொல்ல முற்படுவதில்லை ? " - ஆசிரியர் .
மாணவர்கள் பல பதில்கள் சொன்னாலும் , அவை சரியான காரணத்தை விளக்காததால் , ஆசிரியர் தொடர்ந்தார்., " இரு மனிதர்கள் கோபப் படும் போது , அவர்களின் இதயத்துக்கு இடையே ஆன தூரம் மிக அதிகரித்து விடுகிறது, அந்த இடைவெளியினில் பேசுவது கேட்க வேண்டும் என்பதற்காகவே , இருவரும் உரத்த குரலில் பேசுகின்றனர். எவ்வளுக்கெவ்வளவு கோபம் உள்ளதோ , அவ்வளவு சத்தம் தேவைப் படுகிறது.,
அன்பு வயப்பட்ட இருவர் ( நண்பர்கள் /காதலர்கள் ) பேசும் போது
சத்தம் போட்டு பேச அவசியம் இருக்காது ,ஏனெனில் அவர்களின் இதயத்துக்கு இடையே ஆன தூரம் மிக குறைந்து விடுகிறது.
மனமொத்த காதலர்கள் பேச வேண்டிய அவசியம் கூட இருப்பதில்லை , ஒருவர் முனுமுணுத்தாலே, மற்றவர் புரிந்து கொள்வார். ஏனெனில் அங்கு இதயங்களுக்கு இடையே இடைவெளியே இருக்காது .
இறுதியாக இதய பரிமாற்றம் செய்து கொண்ட காதலர்களுக்கு ,வார்த்தை பரிமாற்றமே தேவை படுவதில்லை .கண்களின் மூலமே பேசி கொள்கின்றனர்.
டிஸ்கி : விவாதங்களின் போது இதயங்களை தூரப் போகும் படியான வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள் ., மற்ற இதயங்களுக்கு செல்லும் பாதை ஒருவழிபாதை., ஒரு முறை தூரமாக சென்று விட்டால் ,மறுமுறை அருகில் வருவது கடினம்.,
எங்கேயோ படித்த கவிதை :
என் மௌனமே உனக்கு
புரியா விட்டால் ,
வார்த்தைகளால்
என்ன பயன் ?