Thursday, May 28, 2009

பீச்சுக்கு போகலாம் வாங்க !!!

கடற்கரையில் காலை நனைக்க விரும்புபவரா நீங்கள்., இதோ உங்களுக்காக ஜப்பான் பொறியாளர்களின் கைவண்ணத்தில் உருவாக்கப் பட்ட உலகின் அழகிய செயற்கை கடல் .


Wednesday, May 27, 2009

மதுரை பதிவர் சந்திப்பு - கேட்க மறந்த கேள்விகள்


பதிவர்களிடம் சில கேள்விகள்  போன ஞாயிற்று கிழமை மதுரை ரேஸ் கோர்ஸில் பதிவர் சந்திப்பு நடந்தது , நீங்கள் அனைவரும் அறிந்த ஒன்றே. பதிவர் உலகிற்கு நான் புதுசு என்பதாலும் , வேற யாரையுமே இதுக்கு முன்னாடி பாத்தது இல்லை ங்கிரதாலும், அப்போ நான் கேக்க நினைச்ச கேள்விகளை ,இந்த பதிவு மூலமா கேட்டுடுறேன்., அதுக்கு சம்பத்த பட்டவுங்க மட்டும்தான் பதில் சொல்லனும்னு இல்லை., பதில் தெரிஞ்ச , சொல்ல நினைக்குற யாரு வேணும்னாலும் சொல்லுங்க ..............


1. தருமி ஐயா, விடம் முதல் கேள்வி : கடவுள் உங்க முன்னாடி தோன்றி உங்களுக்கு என்னா வரம் வேணும் னு கேட்டா நீங்க என்ன செய்வீங்க ( அல்லது ) கேப்பீங்க ?

2.  சீனா ஐயா அவர்களிடம் உங்கள் வலை பதிவின் முதல் பக்கத்தில் ,அழகர் பாட்டு மிக 
அழகாய் பாடி உள்ளீர்களே ? நீங்கள் பாடிய பாடல் தொகுப்பு எதுவும் வெளியிட்டது உண்டா ?

3.சாலிசம்பர் ஐயா அவர்களிடம், தனித்தமிழ் பற்றி நீங்கள் ஒரு விவாதத்தை அன்று ஏன் முன்வைக்க வில்லை?. சுவையாக இருந்திருக்குமே ?

4.சூப்பர் சுப்ரா ஐயா விடம் , நீங்க ஏன் அதிகம் பதிவதில்லை ?

5. இளையகவி கணேஷ் அவர்களிடம் தமிழ்ல இப்போ மொத்தம் எத்தன திரட்டி இருக்கு ? புதிய பதிவர் எல்லாத்துலயும் பதிவை இணைக்கனுமா ?

6.அண்ணன் வால்பையன் அருணிடம், மதுரை ல தண்ணி பஞ்சமா இருக்கே ? எப்டி சமாளிசீங்க ? ( H2O)
7.  சில் பீர் அவர்களிடம் உங்க பேரை பதிவர் சந்திப்பில் விளக்கிய மாதிரி, விளக்கி ஒரு பதிவு எப்ப போடுவீங்க ?

8. ஸ்ரீ , அவர்களிடம் வலையில் மாட்டியது அப்டின்னு , அடிக்கடி பதிவு போடுறீங்களே, நீங்க எப்போ வலையில ( கல்யாணம் ) மாட்ட போறீங்க ?

9.அருண் அவர்களிடம், தமிழ் பதிவு எப்போ போடுவீங்க ?

10.நண்பர் கார்த்திகை பாண்டியன் அவர்களிடம்., followers சதம் எப்போ அடிக்க போறீங்க ? மடி கணினி வாங்கீட்டங்கள ?
11.நண்பர் பாலகுமாரிடம் , செல் போன் , தரீங்க ? வில் போன் தரீங்க ? பில் வராத போன் தருவீங்களா ?

12.டாக்டர் தேவன் மாயம் , அவர்களிடம், நீங்க அமெரிக்க பத்தி எத்தன பதிவு போட்டு இருக்கீங்க ? இன்னைக்கு சேர்த்தி ?

13.நண்பர் டக்ளஸ் ட்ட , JKR மன்றத்த இனி என்ன செய்ய உத்தேசம் ? அவருதான் இனி நடிக்க மாட்டாரே?
14.தம்பி , அன்பு கிட்ட , உன் லோகோ வில மரத்த செதுக்கி அன்பு ன்னு , இருக்கே ? அது நீ செதுக்குனதா ? இது மரத்தோட மட்டும்தானா ?


இது போக மதுரைக்கு வராத பதிவர்கள் , சக்கரை, கடைக்குட்டி, பழமைபேசி, ஆதவா, காடுவெட்டி, நையாண்டி நைனா, இன்னும் நான் படித்த எல்லார் கிட்டயும் கேட்க விரும்பும் கேள்விகள் நிறைய உண்டு ., அத அடுத்த பதிவுல கேக்குறேன்.
உங்க கேள்வி எதாவது இருந்தாலும் கேளுங்க ?

Tuesday, May 26, 2009

அயன் சூர்யா புண்ணியத்தில் காங்கோ பற்றி அறிந்து கொண்ட நமக்கு இந்த படங்கள் காங்கோவின் இன்னொரு பக்கத்தை காட்டுகிறது.

                                                                         Termite Field
                                    காளான் பண்ணை , ஜாபான் அருகே.,.

இஸ்ரோ , மற்றும் வாஸ்டா நகரம் இடையே உள்ள கிராமங்களில் மக்கள் குடியிருப்பு


மரப் பாலம் ,இசிரோ நகரம்.

                    

...................................................................................................................................................................

 
இதுவும் காங்கோ படம் தான். பேரு மயூரி காங்கோ, பாலிவுட் நடிகை. '' papa kahte hain '' என்ற மகேஷ் பட் படத்தில் அறிமுகம் ஆகி ஒரு பத்து படம் நடிச்சார். இப்போ காணாம போய்ட்டார்.Friday, May 22, 2009

டைட்டானிக்.

 டைட்டானிக். கப்பல் கவிழ்ந்த போது வெளியான செய்திகள்
( E mail இல் வந்தது., ஏற்கனவே பார்த்தவர்கள் மன்னிக்கவும் )

Thursday, May 21, 2009

செல் போனில் கரண்ட் இல்லாமல் சார்ஜ் ஏற வேண்டுமா?

           நீயும், நானும், என் செல் போனும்.,                                                                   மற்றவர்கள் அழைக்கும்போது என் செல் போன் உயிர்த்தெழுகிறது.., நீ , அழைக்கும் போதோ , என் செல்களெல்லாம் உயிர்த்தெழுகின்றன.                                                                                                                                                                            
 
  மற்றவர்கள் பேச பேச பேட்டரி சார்ஜ் குறைகிறது; ஆனால் நீ பேச பேச பேட்டரி சார்ஜ் கூடுகிறதே ? எப்படி ?


 
தினமும்
உயிர் வாழ தேவை , என் போனுக்கு ஒரு மணி நேர மின் இணைப்பு., எனக்கு ஒரு நிமிடமாவது உன் சொல் இணைப்பு.
  மிஸ் டு கால் அதிகம்
கொடுத்த நீ , சொல்லாமல் ஒரு நாள், நம்பரை மாற்றினாய், நன்றாய் ஏமாற்றினாய்.
call தான் மிஸ் டு என்றால் ஆளும் மிஸ் டு .

-------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------இவை முன்பு ஒரு காலத்தில் நானே கிறுக்கியவை,
காகிதத்தில் எழுதிய அத்தனையும்,கிழித்து போட்டு விட்டேன். இருப்பினும் ஞாபகத்தில் உள்ள வரிகளை எழுதி விட்டேன்., இனி உங்கள் கையில்.., மறக்காமல் பின்னோட்டம் இடுங்கள்.,
----------------------------------------

Tuesday, May 19, 2009

அண்ணன் , தம்பியை ஜெயித்த அழகிரிக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா?நடந்து முடிந்த பாராளுமன்ற தே தலில் காங்கிரஸ் சார்பில் முதன் முறையாக MP ஆக தேந்தெடுக்கப் பட்டிருக்கும், 57 வயதான திரு.கே.எஸ். அழகிரி , அவர்களுக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. இவர் தற்போது ஜெயித்துள்ள கடலூர் தொகுதியில் இவரை எதிர்த்து போட்டியிட்டு தோற்றுப் போன ,அதிமுக - எம்.சி. சம்பத், தே.மு.தி.க. - எம்.சி.தாமோதரன் ஆகிய இருவரும் உடன் பிறந்த சகோதரர்கள் என்பது சுவாரஸ்யமான விஷயம் . ஆக கழக உடன்பிறப்புகளின் உதவியோடு உண்மையான உடன் பிறப்புகளை வென்ற இவருக்கு அமைச்சர் ஆகும் வாய்ப்பு கிட்டுமா? இதற்கு முன் இரண்டு முறை சிதம்பரம் எம்.எல். ஏ ஆக இருந்தவர் என்ற தகுதியும் இவருக்கு உண்டு. அழகிரி அமைச்சர் ஆக வாழ்த்துவோம்!!!...

------------------------------------------------------------------------------------------------------------------------------
மேலே இன்னொரு படத்தில் இருப்பவர் திரு. மேத்யு ., மதுரை தேர்தல் பார்வையாளராக இருந்தவர், தேர்தல் முடிந்ததும் மற்ற பார்வையாளர்கள் அரசாங்க செலவில் விமானத்தில் ஊருக்கு சென்று விட்டனர். ஆனால் இவரோ மாட்டு தாவணி பஸ் ஸ்டாண்ட் போய், பஸ் பிடித்து சொந்த ஊர் திரும்பியிருக்கிறார். இவரை போன்றோரை வாழ்த்த வேண்டியது நம் கடமை அல்லவா ?

..................................--------------------------............................---------------------------------------


இன்னொரு செய்தியும் ஒரு நேர்மையான அதிகாரி பற்றியது தான், தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் திரு. நரேஷ் குப்தா வை , பா.ம.க. டாக்டர். ராமதாஸ் இவரை மாடு மேய்க்க போகலாம் என்று கூறியது. அரசியல் வாதிகள் , நேர்மையான அதிகாரிகளை இவ்வாறு விமர்சிக்கலாமா?

Sunday, May 17, 2009

படம் பாத்து விடை சொல்லுங்க !!!
Monday, May 11, 2009

வீர பாண்டி கோட்டையிலே....,

14 ஆம் நூற்றாண்டில் எங்க ஊர, வீரபாண்டியன் என்ற ராசா ஒருத்தர் ஆட்சி செஞ்சுகிட்டு வந்தாராம். அப்போ அவருக்கு திடீர்னு நோவு வந்து, ரெண்டு கண்ணுலயும் பார்வை பறி போயிடுச்சாம் . அவரு பாக்காத வைத்தியம் இல்லே, போகாத கோவில் இல்லே, ஆனாலும் பார்வையே வரல. ரொம்ப மனசு ஒடஞ்சு போன ராசா, சரி, நாம இனி , பதவிய விட்டு விலகிட்டு, சாமியாரா போயிடுவோம் அப்டின்னு நினைச்சு தூங்கிட்டார். அப்போ அவரு கனவுல வந்த, சாமி ,நீ இப்படியே, வைகை கரையோரம் மேற்காலே நூறு கல் தொலைவு போனேன்னா , அங்கே '' நிம்பா ஆரண்யம் '' என்ற காட்டு பகுதி வரும், அங்கே நான் ஆற்றங்கரை ஓரம் சுயம்பு ஆக, எழுந்தருளியிருக்கிறேன்., மற்றும் அங்கே ஸ்ரீ கவுமாரி அம்மன் கோயில் உள்ளது . அங்கே போய் கும்பிட்டா உனக்கு திரும்ப பார்வை கிடைக்கும் னு, சொன்னாரு. உடனே அந்த ராசா, அந்த காட்டுக்கு வந்து ஆத்துல குளிச்சுட்டு, அம்மனை போய் மனமுருக வேண்டினார். உடனே அவருக்கு ஒரு கண்ணில் பார்வை வந்துடுச்சி. பிறவு, ஆற்றங்கரையோரம் லிங்க வடிவில் தானே எழுந்தருளியிருந்த சிவ பெருமானை வணங்கினார்., உடனே அவருக்கு ரெண்டாவது கண்ணுலேயும் , பார்வை வந்துச்சாம். மிக்க மகிழ்ந்த ராசா, அந்த லிங்கத்தை , ஸ்ரீ கண்ணிச்வரமுடையார் கோயில் என்ற பேரில் அழகான ஒரு கோவிலை ஆத்தங்கரை ஓரமா கட்டினார். பொறவு அந்த இடமே அந்த ராசா பேரால, வீரபாண்டி ன்னு ஆகி போச்சு.

அந்த கோவில்ல ஒவ்வொரு சித்திரை கடைசி செவ்வாய் கிழமை லேந்து , எட்டு நாள் ரொம்ப சிறப்பான திருவிழா நடக்கும். அதன் படி , நாளக்கி இந்த வருஷ விழா ஆரம்பிக்குது. அக்கினி சட்டி எடுப்பது, என்பது இங்க ரொம்ப பிரபலம். நெறைய ஊர்ல பல நாள் திருவிழா நடந்தா கூட ஒரு நாள் தான் அக்கினி சட்டி எடுப்பார்கள். ஆனால் இங்கே எட்டு நாளும் ராத்திரியும், பகலும் அக்கினி சட்டி எடுப்பார்கள்.  
சக்தி வாய்ந்த இந்த அம்மனிடம் நேர்த்திக்கடன் செலுத்துதல் மிக முக்கிய நடைமுறை. தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்பங்களிலும், யாராவது, ஒரு உறவினரோ, நண்பரோ, இங்கு அக்கினி சட்டி எடுக்காமல் பார்ப்பது அரிது.,மற்றவர்கள் அவரவர் வசதிக்கேற்ப, மாவிளக்கு எடுத்தல், ஆயிரம் கண் விளக்கெடுத்தல், மொட்டை போடுதல் , போன்ற பிரார்த்தனைகளில் ஈடு படுவர்.
அதே போல திருவிழா இல்லாத சமயங்களிலும் ,முகூர்த்த நாட்களில் திருமணங்கள் ஏராளமாக நடை பெறும். 
மதுரை ல ஓடுற ( ? ) வைகை ஆத்துக்கு முக்கிய ஆதாரமான முல்லை ஆறு இங்கே குளிக்க கூடிய அளவில் , சுத்தமாகவும், சுகாதாரமாகவும் ஓடுகின்றது. மதுரை லே இருந்து மேற்காலே 83KM தொலைவில இருக்கு. தேனி ல இருந்து கம்பம் போற ரோட் ல ஏழு கி. மீ. ல இருக்கு. தங்கும் வசதி எதுவும் இல்லை, தேனி க்குதான் வரணும். எட்டு நாள்ல உங்களுக்கு வசதி படுற ஒரு நாள் இங்க வந்து அம்மனையும், ஈசனையும், தரிசித்து அருள் பெறுங்கள்.

Thursday, May 7, 2009

குப்புற படுத்து தூங்குபவரா , நீங்கள் ? இத அவசியம் படிங்க !

இங்கிலாந்தில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் எப்படி, எப்படி தூங்குபவர்கள் , எப்படிப்பட்டவர்கள் என பின்வருமாறு தெரிவிக்கிறது ;  
1. குப்புறப்படுத்து தூங்குபவர்கள், சோம்பேறித்தனம் மிகுதியாக உள்ளவர்கள்: உழைப்பில் ஆர்வம் இல்லாதவர்கள்: தங்கள் வேலையின் மீது பற்று இன்றி இருப்பர்.
2.சுருண்டு படுத்து உறங்குபவர்கள், கோழைகள் : எப்போதும் , எதற்கும், எதிலும் பிறர் ஆதரவை நாடி நிற்பவர்கள்.
3. மல்லாந்து படுத்து உறங்குபவர்கள் , தன்னம்பிக்கை மிக்கவர்கள் ,பொது நலனில் அக்கறை கொண்டவர்கள் ; பிறரை எளிதில் கவரும் ஆற்றல் கொண்டவர்கள் ! 
----- இவ்வாறு கூறுகிறது. இதில் நீங்கள் எந்த ரகம் ?முதல் இரண்டு ரகமாக இருந்தால் , இன்றிலிருந்து மல்லாந்து படுத்து பாருங்கள் .

அதே போல ஒருவர் பேசும் போது செய்யும் சேஷ்டை களில் இருந்து அவரது குணம் இவ்வாறு இருக்கும் என கூறுகிறது .,  
1.நின்று கொண்டு பேசும் போது தலையை விரல்களால் சொறிந்தபடி நிற்பவர்கள் -- ஞாபக மறதிக் காரர்கள் .
2.விரல் நகத்தை கடித்து கொண்டே பேசுபவர்கள், எந்த காரியத்தையும் அதிக நேரம் எடுத்து கொண்டு செய்யும் ----- சுருசுருப்பில்லாதவர்கள்.
3. சட்டைப் பித்தானை திருகிக் கொண்டே பேசுபவர்கள் ,== தன்னம்பிக்கை இல்லாதவர்கள்.
4.பக்கத்தில் உள்ள டேபிள் மீதோ , சேர் மீதோ விரலால் தட்டிக் கொண்டே பேசுபவர்கள் ------ அலட்சிய மனோ பாவம் உள்ளவர்கள். 
5.விரலை மடக்கி உள்ளங்கையால் தேய்த்த படி பேசுபவர்கள் ,------ பயந்த சுபாவம் உள்ளவர்கள் ...
இப்படி போகிறது , அந்த ஆராய்ச்சி குறிப்பு, இது உங்களுக்கு ஏற்புடையதாக உள்ளதா ? உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.

Wednesday, May 6, 2009

கம்யூனிஸ்ட் பிரச்சாரத்தில் நமீதா ................

நம்ம ஊர்ல ( அதாங்க மதுரை ) நேத்து , மீனாக்ஷி அம்மன் தேரோட்டம் நடந்ததால், இரவு வழக்கத்தை விட பெரிய டிராபிக் ஜாம் அதனால நெல்பேட்டை அருகே நடந்த கம்யூனிஸ்ட் பிரசார கூட்டத்தை கவனிக்கிற மாதிரி ஆகிடுச்சி. வில்லுபாட்டு ஸ்டைல் ல ரெண்டு பேரு பேசிகிட்டும் , பாடிக்கிட்டும் இருந்தாங்க. சரி தோழர்கள் மின்வெட்டு, இலங்கை பிரச்னை, அணு ஆயுத ஒப்பந்தம் இத பத்தி ஏதாவது சொல்லுவாங்க அப்டின்னு பார்த்தால், மானாட மயிலாட ,வில,நமிதா ன்னு ஒரு பொண்ணு வரும், அது டவுசர் போட்டு வரும் ,சேலை கட்ட தெரியாது,அப்டி இப்டின்னு இருவது நிமிஷம் பேசினாங்க . அதுக்குள்ளே டிராபிக் கொஞ்சம் கிளியர் ஆனதால நான் கிளம்பிட்டேன். ஒரு கதை ஒன்று என் நினைவிற்கு வந்தது.ஒரு துறவி தன் சீடர்களிடம் சொன்னாராம், துறவறத்தில் இருக்கும் நாம் எந்த பெண்களையும் தொடக் கூடாது என்று. ஒரு நாள் அந்த துறவியும் , சீடர்களும் ஒரு ஆற்றை கடந்து செல்ல நேர்ந்தது. திடீரென ஆற்றில் வெள்ளம் வந்து , அதில் ஒரு பெண் அடித்து செல்லப் பட்டு கொண்டிருந்தாள். உடனே அந்த துறவி சற்றும் தாமதிக்காமல் ஆற்றில் நீந்தி சென்று அந்த பெண்ணை காப்பாற்றி கரை சேர்த்து விட்டு சீடர்களுடன் பயணத்தை தொடர்ந்தார். ஒரு சீடன் மிகுந்த குழப்பத்துடனே வந்து கொண்டு இருந்தான் , கொஞ்ச நேரம் கழித்து துறவியிடம் கேட்டானாம்,பெண்களை தொட கூடாது என்று சொல்லி விட்டு ,நீங்கள் மட்டும் ஒரு பெண்ணை தொடலாமா ? இது தவறில்லையா? என்றானாம் . துறவி, நான் ஆற்றங்கரையிலேயே அந்த பெண்ணை இறக்கி விட்டேன். ஆனால் நீ இப்போது வரை அப்பெண்ணை உன் நினைவில் தூக்கி வந்து கொண்டிருக்கிறாய் என்று முடித்தார். இந்த கதைக்கும் , தோழர்கள் பிரச்சாரத்துக்கும் என்ன சம்மந்தம் என்கிறீர்களா ?. கலைஞர் டிவி ல, நமீதா வந்தது, போனது எப்போவோ முடிஞ்சு போன விஷயம் , ஆனா , இன்னமும் நமீதா வை மனசில தூக்கி கொண்டே செல்லும் நம் தோழர்கள் அந்த சீடனை போல . வாழ்க கம்யுனிசம், வளர்க நமீதா புகழ்.

Tuesday, May 5, 2009

வென்று விட்டார் மதுரை வீரர் , வந்து வாழ்த்துங்க

இட்லி கடையிலிருந்து ஐ ஐ எம் போன சரத் மாதிரி, எங்க ஊரிலேயும் ஒரு வெற்றி வீரர் சாதிச்சிருக்கார். அவர் மதுரை அண்ணா நகரை சேர்ந்த திரு.வீரபாண்டியன் . படிக்கும் போது குடும்ப வறுமையின் காரணமாக பள்ளி விட்டு வந்த பின்பு தினமும் மாலை நாலு மணி முதல் இரவு பதினோரு மணி வரை புரோட்டா கடையில் வேலை பார்த்து கொண்டே படித்துள்ளார். மாநகராட்சி பள்ளியில் படித்து ,மாநில அளவில் புவியியல் பாடத்தில் முதலிடம் பெற்ற இவர் , லயோலா வில் பி ஏ முடித்திருக்கிறார். தற்போது ஐ.ஏ.எஸ். தேர்வில் தேசிய அளவில் ஐம்பத்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். சிறு வயதில் கலெக்டர் காரில் செல்வதை பார்த்து நானும் ஒரு நாள் கலெக்டர் ஆவேன் என்று கனவு கண்டுள்ளார், இந்த கலாம் கண்ட மாணவர். இன்று கனவினை நனவாக்கி உள்ளார். தாம் படித்த பள்ளிகளுக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை தேடி தந்துள்ளார். இன்றைய மாணவர்களும் ,அவர்கள் பெற்றோர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்தி ஒன்று இதில் உள்ளது . அதிகமாக பணம் கேட்கும் ஆங்கில வழி கல்வி முறை தான் சிறந்தது என்பது தவறு. மற்றும் வறுமை ஒருவனது லட்சியத்துக்கு தடை கல்லாக இருக்க முடியாது. வாழ்க வீரபாண்டியன் ஐ.ஏ .எஸ். , சிறக்கட்டும் அவரது பணி.....,

Monday, May 4, 2009

அம்மா ஆட்சி பொறுப்பை ஏற்றார்.

மதுரை யில் கடந்த பத்து நாட்களாக நடந்து வரும் மீனாட்சி அம்மன் கோயில் திருவிழாவில் , கடந்த ஞாயிறு அன்று அன்னை மீனாக்ஷியின் பட்டாபிசேகம் இனிதே நடந்தேறியது. அம்மா ஆட்சி பொறுப்பை ஏற்று கொண்டார்.

இதன் தொடர்ச்சியாக நேற்று திக் விஜயம், இன்று திருக்கல்யாணம், நாளை தேரோட்டம் நடைபெறும். அனைவரும் வந்து அம்மாவின் அருளாசி பெருக.

Saturday, May 2, 2009

இரண்டாம் தேதியில் இரண்டாவது பதிவு

முதல் பதிவுக்கு ஆதரவளித்து , நேரிலும், தொலைபேசி வாயிலாகவும், பின்னூட்டம் வழியாகவும் ஊக்கப் படுத்திய கோடானு கோடி தமிழ் நெஞ்சங்களுக்கு நன்றி. அக்கறையுடன் எழுதிய சக்கரை க்கும் நன்றி.
முதல் பதிவு முடித்தவுடன் தொலைபேசியில் நள்ளிரவில் ஒரு அழைப்பு வந்தது. ஆங்கிலத்தில் பேசியதால் அரைகுறை யாகவே கேட்டது . ஒபாமா விடம் இருந்து என்பது புரிந்தது. அப்போது அவர் என்னிடம் கேட்டு கொண்டது ,
தொண்டர் இல்லாமல் கட்சி ஆரம்பிக்கிறது,
கதை இல்லாம சினிமா எடுக்கிறது,
சரக்கு இல்லாம பதிவு போடுறது ,
இது மூன்றையும் உடனே நிறுத்த சொன்னார்.
\கடைசியா ஒன்னு சொன்னாரு, இத மீறி எதாவது நடந்துச்சுன்னா நான் ஒபாமா வா இருக்க மாட்டேன் , ஒசாமா வா மாறிடுவேன் அப்டின்னு புதியகீதை விஜய் சொல்ற மாதிரி சொன்னாரு.
சரி எதுக்கு வம்பு ன்னுதான் இதுவரைக்கும் பதிவு போடல.
இனிமே அடிக்கடி பதிய போறேன். எல்லா புகழும் சக்கரைக்கே.