Wednesday, May 27, 2009

மதுரை பதிவர் சந்திப்பு - கேட்க மறந்த கேள்விகள்


பதிவர்களிடம் சில கேள்விகள்  போன ஞாயிற்று கிழமை மதுரை ரேஸ் கோர்ஸில் பதிவர் சந்திப்பு நடந்தது , நீங்கள் அனைவரும் அறிந்த ஒன்றே. பதிவர் உலகிற்கு நான் புதுசு என்பதாலும் , வேற யாரையுமே இதுக்கு முன்னாடி பாத்தது இல்லை ங்கிரதாலும், அப்போ நான் கேக்க நினைச்ச கேள்விகளை ,இந்த பதிவு மூலமா கேட்டுடுறேன்., அதுக்கு சம்பத்த பட்டவுங்க மட்டும்தான் பதில் சொல்லனும்னு இல்லை., பதில் தெரிஞ்ச , சொல்ல நினைக்குற யாரு வேணும்னாலும் சொல்லுங்க ..............


1. தருமி ஐயா, விடம் முதல் கேள்வி : கடவுள் உங்க முன்னாடி தோன்றி உங்களுக்கு என்னா வரம் வேணும் னு கேட்டா நீங்க என்ன செய்வீங்க ( அல்லது ) கேப்பீங்க ?

2.  சீனா ஐயா அவர்களிடம் உங்கள் வலை பதிவின் முதல் பக்கத்தில் ,அழகர் பாட்டு மிக 
அழகாய் பாடி உள்ளீர்களே ? நீங்கள் பாடிய பாடல் தொகுப்பு எதுவும் வெளியிட்டது உண்டா ?

3.சாலிசம்பர் ஐயா அவர்களிடம், தனித்தமிழ் பற்றி நீங்கள் ஒரு விவாதத்தை அன்று ஏன் முன்வைக்க வில்லை?. சுவையாக இருந்திருக்குமே ?

4.சூப்பர் சுப்ரா ஐயா விடம் , நீங்க ஏன் அதிகம் பதிவதில்லை ?

5. இளையகவி கணேஷ் அவர்களிடம் தமிழ்ல இப்போ மொத்தம் எத்தன திரட்டி இருக்கு ? புதிய பதிவர் எல்லாத்துலயும் பதிவை இணைக்கனுமா ?

6.அண்ணன் வால்பையன் அருணிடம், மதுரை ல தண்ணி பஞ்சமா இருக்கே ? எப்டி சமாளிசீங்க ? ( H2O)
7.  சில் பீர் அவர்களிடம் உங்க பேரை பதிவர் சந்திப்பில் விளக்கிய மாதிரி, விளக்கி ஒரு பதிவு எப்ப போடுவீங்க ?

8. ஸ்ரீ , அவர்களிடம் வலையில் மாட்டியது அப்டின்னு , அடிக்கடி பதிவு போடுறீங்களே, நீங்க எப்போ வலையில ( கல்யாணம் ) மாட்ட போறீங்க ?

9.அருண் அவர்களிடம், தமிழ் பதிவு எப்போ போடுவீங்க ?

10.நண்பர் கார்த்திகை பாண்டியன் அவர்களிடம்., followers சதம் எப்போ அடிக்க போறீங்க ? மடி கணினி வாங்கீட்டங்கள ?
11.நண்பர் பாலகுமாரிடம் , செல் போன் , தரீங்க ? வில் போன் தரீங்க ? பில் வராத போன் தருவீங்களா ?

12.டாக்டர் தேவன் மாயம் , அவர்களிடம், நீங்க அமெரிக்க பத்தி எத்தன பதிவு போட்டு இருக்கீங்க ? இன்னைக்கு சேர்த்தி ?

13.நண்பர் டக்ளஸ் ட்ட , JKR மன்றத்த இனி என்ன செய்ய உத்தேசம் ? அவருதான் இனி நடிக்க மாட்டாரே?
14.தம்பி , அன்பு கிட்ட , உன் லோகோ வில மரத்த செதுக்கி அன்பு ன்னு , இருக்கே ? அது நீ செதுக்குனதா ? இது மரத்தோட மட்டும்தானா ?


இது போக மதுரைக்கு வராத பதிவர்கள் , சக்கரை, கடைக்குட்டி, பழமைபேசி, ஆதவா, காடுவெட்டி, நையாண்டி நைனா, இன்னும் நான் படித்த எல்லார் கிட்டயும் கேட்க விரும்பும் கேள்விகள் நிறைய உண்டு ., அத அடுத்த பதிவுல கேக்குறேன்.
உங்க கேள்வி எதாவது இருந்தாலும் கேளுங்க ?

22 comments:

பழமைபேசி said...

எனக்கும் இதுக்களுக்கு உண்டான விடை தெரிஞ்சாகணும்... ஒடனே தொகுத்து இடுகை இடுங்க....

பழமைபேசி said...

//எத்தன பதிவு போட்டு இருக்கீங்க ? //

எத்தன இடுகைன்னு வரணும்...

கடைக்குட்டி said...

தல கலாய்ச்சுறாதீக!!!!

தேனீ - சுந்தர் said...

/எத்தன பதிவு போட்டு இருக்கீங்க ? //

எத்தன இடுகைன்னு வரணும்...

/திருத்திக்கிறேன் தல ,

தேனீ - சுந்தர் said...

//கடைக்குட்டி said...
தல கலாய்ச்சுறாதீக!!!//

கலாய்க்க மாட்டேன் பாக்கலாம் !

Suresh said...

சரி கலாய் தான் ஹம் ஒரு முடிவோட தான் இருக்கிங்க அங்க கேட்டு இருந்தா கும்மி எடுத்து இருப்பாங்க

Suresh said...

//அண்ணன் வால்பையன் அருணிடம், மதுரை ல தண்ணி பஞ்சமா இருக்கே ? எப்டி சமாளிசீங்க ? ( H2O)//

/தம்பி , அன்பு கிட்ட , உன் லோகோ வில மரத்த செதுக்கி அன்பு ன்னு , இருக்கே ? அது நீ செதுக்குனதா ? இது மரத்தோட மட்டும்தானா ? //

ஹீ ஹீ

ஸ்ரீதர் said...

கூடிய சீக்கிரம் மாட்டிக்குவேன்னுதான் நினைக்கிறேன்.

Anonymous said...

வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,

அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.

நன்றி
தமிழ்ர்ஸ்

cheena (சீனா) said...

அன்பின் சுந்தர் - உனக்கு வாயிலே கொலஸ்ட்ரால் கொஞ்சம் அதிகம் - தேனிக்கு அடிக்கடி வருவேன் - வச்சிக்கறேன் அங்கே

தேனீ - சுந்தர் said...

//
Suresh said...
சரி கலாய் தான் ஹம் ஒரு முடிவோட தான் இருக்கிங்க அங்க கேட்டு இருந்தா கும்மி எடுத்து இருப்பாங்க//

அதானே தைரியமா இங்கே கேக்குறேன்.


//ஸ்ரீதர் said...
கூடிய சீக்கிரம் மாட்டிக்குவேன்னுதான் நினைக்கிறேன்.//
வருகைக்கு மிக்க நன்றி.
வேகமா மாட்டிக்க வாழ்த்துக்கள் நண்பரே


//cheena (சீனா) said...
அன்பின் சுந்தர் - உனக்கு வாயிலே கொலஸ்ட்ரால் கொஞ்சம் அதிகம் - தேனிக்கு அடிக்கடி வருவேன் - வச்சிக்கறேன் அங்கே//

அய்யா நான் இருப்பது மதுரையில தான். வருகைக்கு மிக்க நன்றி அய்யா.

பாலகுமார் said...

//நண்பர் பாலகுமாரிடம் , செல் போன் , தரீங்க ? வில் போன் தரீங்க ? பில் வராத போன் தருவீங்களா ?//
முன்கூட்டியே பணம் செலுத்தி , prepaid card வாங்கிக்கோங்க பாஸ், பில் கண்டிப்பா வராது :)

தேனீ - சுந்தர் said...

பாலகுமார் said...
//நண்பர் பாலகுமாரிடம் , செல் போன் , தரீங்க ? வில் போன் தரீங்க ? பில் வராத போன் தருவீங்களா ?//
முன்கூட்டியே பணம் செலுத்தி , prepaid card வாங்கிக்கோங்க பாஸ், பில் கண்டிப்பா வராது :)
அது சரி.,

கார்த்திகைப் பாண்டியன் said...

உங்கள் கேள்விகளுக்கு.. ஹ்ம்ம்ம்ம்.. இருக்கிறது..:-)

விஜயராஜா said...

என்னாச்சு தம்பி உங்களுக்கு?

தருமி said...

ஹாய் தேனீ,

என்ன இப்படி சொல்லீட்டீங்க! சாமி மட்டும் வந்து நின்னு பேசிட்டு போச்சுன்னு வைங்க .. அவர்ட்ட என்ன கேக்குறது! அடுத்த நிமிஷமே புதுசா ஒரு மதம் ஆரம்பிச்சிர மாட்டேனா ..சாமி பேர சொன்னா காசு குமிஞ்சிராதா என்ன?

thevanmayam said...

12.டாக்டர் தேவன் மாயம் , அவர்களிடம், நீங்க அமெரிக்க பத்தி எத்தன பதிவு போட்டு இருக்கீங்க ? இன்னைக்கு சேர்த்தி ?
//
எண்ணி சொல்லுறேன்!! அடுத்த சந்திப்பில்!!

சாலிசம்பர் said...

தேனீ அய்யா,எங்க நம்மள பேசவுட்டாக.

Anbu said...

நானாவே செதுக்கியது அண்ணா

தேனீ - சுந்தர் said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
உங்கள் கேள்விகளுக்கு.. ஹ்ம்ம்ம்ம்.. இருக்கிறது..:-)//
கடைசி வர பிறந்த நாள் கேக்கு கொடுக்கலீயே , நீங்க ?

//விஜயராஜா said...
என்னாச்சு தம்பி உங்களுக்கு?//
எது அண்ணா? நீங்க ஏன் பதிவர் சந்திப்புக்கு வரல ?

தருமி said...
ஹாய் தேனீ,

என்ன இப்படி சொல்லீட்டீங்க! சாமி மட்டும் வந்து நின்னு பேசிட்டு போச்சுன்னு வைங்க .. அவர்ட்ட என்ன கேக்குறது! அடுத்த நிமிஷமே புதுசா ஒரு மதம் ஆரம்பிச்சிர மாட்டேனா ..சாமி பேர சொன்னா காசு குமிஞ்சிராதா என்ன?//

புதுசா இன்னொரு மதமா ? இந்த விபரீத விளைவு ஏற்படாம இருக்கனும்னுதான் சாமி உங்க முன்னாடி வர பய படுகிறார் போல !!!

thevanmayam said...
12.டாக்டர் தேவன் மாயம் , அவர்களிடம், நீங்க அமெரிக்க பத்தி எத்தன பதிவு போட்டு இருக்கீங்க ? இன்னைக்கு சேர்த்தி ?
//
எண்ணி சொல்லுறேன்!! அடுத்த சந்திப்பில்!!//

அப்போ விரைவில் இன்னொரு முறை சந்திப்போம்


சாலிசம்பர் said...
தேனீ அய்யா,எங்க நம்மள பேசவுட்டாக.//

அதுவும் கரெக்ட்டுதான். இருந்தாலும் உங்களுடன் விவாதிக்க ஆவலாக உள்ளது.

தேனீ - சுந்தர் said...

//Anbu said...
நானாவே செதுக்கியது அண்ணா//

சரி தம்பி, மரத்துல மட்டும் செதுக்குங்க, இதயத்துல இப்போதக்கி வேணாம்

வால்பையன் said...

//அண்ணன் வால்பையன் அருணிடம், மதுரை ல தண்ணி பஞ்சமா இருக்கே ? எப்டி சமாளிசீங்க ? ( H2O)//

save water
drink only beer!