Tuesday, July 14, 2009

கர்ம வீரர் பிறந்த நாள் - சில நினைவுகள்1971 - ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் இந்திரா காங்கிஸ் அமோக வெற்றி பெற்றது. காமராஜர் சார்ந்திருந்த பழைய காங்கிரஸ் படுதோல்வி அடைந்திருந்தது.

தொண்டர்கள் காமராஜரிடம் வந்து,

”ஜயா! அவர்கள் வெற்றிக்கு காரணம் ”ரஷ்ய மை” வைத்து ஏமாற்றி விட்டார்கள். வாக்குச் சீட்டில் ரஷ்ய மை தடவிவிட்டார்கள்” என்று கூறினார்கள்.

இதைக் கேட்ட காமராஜர்,

”ஜனநாயகத்திலே நம்பிக்கை உள்ளவர்களின் பேச்சா இது. நாம் தேர்தலிலே தோற்றதிற்குக் காரணம் ‘மை’ என்கிறீர்களே! அதுவா உண்மை? இல்லை. நம்மை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை” - என்றார்.

முதலமைச்சர் ஆனதும் காமராஜர் பேசிய பேச்சில் ,

” நான் ஏழைகளின் துயர் நீக்கவே முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளேன். அதற்கு இடமில்லை என்றால் எனக்கு இப்பதவி தேவை இல்லை.” என்றார்.

ஏழையாகப் பிறந்து, எளிமையாக வாழ்ந்து, எந்தச் சூழ்நிலையிலும் ஏழைகளின் துயரங்களை நீக்கவே எண்ணிப் பாடுபட்ட காமராஜரை ”ஏழைப் பங்காளன்” என்று சொல்வதிலே தவறில்லை தானே.

அப்போது காமராஜர் பதவியில் இல்லை. நாகர்கோயில் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக மட்டும் இருந்தார். தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டு இருந்தது.

அமெரிக்க அதிபர் நிக்ஸன் இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் வந்திருந்தார். அவர் பெருந்தலைவர் காமராஜரைச் சந்திக்க விரும்பினார். புது டெல்லியிலிருந்து தேதி மற்றும் நேரம் கேட்டுத் தகவல் வந்திருந்தது. இதைக் காமராஜரிடம் கூறினார்கள்.

”பார்க்க முடியாதுன்னேன்” - என்று காமராஜர் பதில் சொல்லி விட்டார். ஏன் இப்படிச் சொல்கிறார்? வந்து பார்க்க விரும்புவதோ அமெரிக்க அதிபர். குழப்ப மடைந்தார்கள் கூடியிருந்தவர்கள்.

அவர்களைப் பார்த்துக் காமராஜர் சொன்னார். அண்ணாத்துரை அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது அவர்அமெரிக்கா அதிபர் நிக்ஸனைச் சந்திக்க விரும்பினார். பார்க்க மறுத்திவிட்டாராம் நிக்ஸன். அப்படிப்பட்டவரை நான் ஏன் பார்க்க வேண்டும்” என்றார் காமராஜர்.

இது காமராஜர், தானும் ஒரு தமிழன் என்று தன்மானத்தையும், மாற்றுக் கட்சிக்காரர் என்றாலும் அண்ணாத்துரைக்கு அமெரிக்க அதிபர் சந்திக்கச் சந்தர்ப்பம் கொடுக்காததற்குக் கண்டனமும் தெரிவித்ததையும் தானே காட்டுகிறது.

15 comments:

சுசி said...

சுசி தான் முத ஆளு.... ஆஹா! இன்னிக்கு ஸ்வீட் சாப்ட ஒரு காரணம் கிடைச்சாச்சு.

அவர் தன்மானத் தமிழருங்க. இன்னிக்கு அரசியல்ல இருக்கிறவங்க தமிழரா மட்டும் தான் இருக்காங்க. அவங்க மானம்????

சொல்லரசன் said...

//இது காமராஜர், தானும் ஒரு தமிழன் என்று தன்மானத்தையும், மாற்றுக் கட்சிக்காரர் என்றாலும்//

இன்னைக்கு இந்த உணர்வு அரசியல்வாதிகளிடையே இல்லாதது வருந்ததக்கது.

சொல்லரசன் said...

சுசி தான் முத ஆளு.... ஆஹா! இன்னிக்கு ஸ்வீட் சாப்ட ஒரு காரணம் கிடைச்சாச்சு.


இப்ப‌டி எல்லா விச‌ய‌த்திற்கும் இனிப்பு சாப்பிட‌ஆர‌ம்பிச்சா....
ந‌ம்ம காரைக்குடி அச‌ல் டாக்ட‌ரிட‌ம் சொல்லி இனிப்பு சாப்பிடுவ‌தால் வ‌ரும் பின்விளைவுக‌ள் என‌ ப‌திவுபோட வேண்டிய‌தாகிவிடும்

சொல்லரசன் said...

அய்யா தேனீ சுந்தர் எங்கஊரில் இப்போது பகல்,உங்க ஊரில் இரவா?புரிந்தால் சரி

கார்த்திகைப் பாண்டியன் said...

அவரைப் போல ஒருவர் இன்று நம்மிடையே இல்லையே என்று ஏக்கமாக இருக்கிறது... பகிர்வுக்கு நன்றி

தேவன் மாயம் said...

இது காமராஜர், தானும் ஒரு தமிழன் என்று தன்மானத்தையும், மாற்றுக் கட்சிக்காரர் என்றாலும் அண்ணாத்துரைக்கு அமெரிக்க அதிபர் சந்திக்கச் சந்தர்ப்பம் கொடுக்காததற்குக் கண்டனமும் தெரிவித்ததையும் தானே காட்டுகிறது.///
உண்மைதான்!!

பிரியமுடன்.........வசந்த் said...

//”ஜனநாயகத்திலே நம்பிக்கை உள்ளவர்களின் பேச்சா இது. நாம் தேர்தலிலே தோற்றதிற்குக் காரணம் ‘மை’ என்கிறீர்களே! அதுவா உண்மை? இல்லை. நம்மை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை” - என்றார்.//

தோல்வியை ஒப்புக்கொண்ட தன்மான தமிழன்....

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//அண்ணாத்துரை அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது அவர்அமெரிக்கா அதிபர் நிக்ஸனைச் சந்திக்க விரும்பினார். பார்க்க மறுத்திவிட்டாராம் நிக்ஸன். அப்படிப்பட்டவரை நான் ஏன் பார்க்க வேண்டும்” என்றார் காமராஜர்.//


தமிழக முதல்வர் என்ற பதம் விடுபட்டு உள்ளது நண்பரே..,

ஒரு மாநிலத்தின் முதல்வரை சந்திக்க விரும்பாதவரை சந்திக்க தாணும் விரும்பவில்லை என்று ஒதுக்கியதாக செய்தி

இந்திய இறையாண்மைக்கு அவர் கொடுத்த மரியாதை அது..,

சுந்தர் said...

நன்றி சுசீ, உங்கள் கேள்வி நியாயமானதே ? அவர்கள் மானம் .... ???

சுந்தர் said...

ஆமாம் அரசரே, இன்றைய அரசியல் வாதிகளிடம் காமராசரின் உணர்வு இல்லை.
அடடா , அது என்ன காரைக்குடி அசல் டாக்டர் , அப்போ நகல் டாக்டர் யாரு ?இகி.., இகி ....
எங்க ஊரே தூங்கா நகரம் தான்., இரவும் எங்களுக்கு பகலே !

சுந்தர் said...

ஏக்கம் தான் படமுடியும் ., கா.பா. அவர்களே ..,

சுந்தர் said...

நன்றி டாக்டர் தேவன் மாயம் , நன்றி நண்பர் வசந்த் ...,

சுந்தர் said...

ஆமாம் டாக்டர் சுரேஷ் , அவர் இந்திய இறையாண்மையை மதித்தார் ,வருகைக்கு நன்றி

கிருஷ்ணமூர்த்தி said...

காமராஜர் பெயரை இன்னமும் நினைவு வைத்துக் கொண்டிருக்கும் இதயங்களைப் பார்க்கும் போது மனதுக்கு மிகவும் நிறைவாக இருக்கிறது.

சுந்தர் said...

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ,கிருஷ்ணமூர்த்தி அவர்களே !