Wednesday, July 22, 2009

ஆதலினால் காதல் செய்வீர் !




ஒரு ஆசிரியர் , மாணவர்களிடம் " கோபம் வந்தால் நாம் ஏன் சத்தமாக பேசுகிறோம் ? மக்கள் ஆத்திரத்தில் ஆவேசமாக உரத்த குரலில் பேசி சண்டை இட்டு கொள்வதேன் ? ,என்று கேட்டார்.
ஒரு மாணவன் எழுந்து , " கோபம் வரும் போது, நாம் அமைதியை இழந்து விடுகிறோம்,அதனால் கத்துகிறோம் " என்றான் .
" சரி, ஆனால் நம்மை கோபப் படுத்திய நபர் ,மிக அருகில் இருக்கும் போது , உரத்த குரலில் ,தடித்த வார்த்தைகளில் பேசுவதின் காரணமென்ன ? நாம் சொல்ல நினைப்பதை மெதுவான குரலில் ஏன் சொல்ல முற்படுவதில்லை ? " - ஆசிரியர் .
மாணவர்கள் பல பதில்கள் சொன்னாலும் , அவை சரியான காரணத்தை விளக்காததால் , ஆசிரியர் தொடர்ந்தார்., " இரு மனிதர்கள் கோபப் படும் போது , அவர்களின் இதயத்துக்கு இடையே ஆன தூரம் மிக அதிகரித்து விடுகிறது, அந்த இடைவெளியினில் பேசுவது கேட்க வேண்டும் என்பதற்காகவே , இருவரும் உரத்த குரலில் பேசுகின்றனர். எவ்வளுக்கெவ்வளவு கோபம் உள்ளதோ , அவ்வளவு சத்தம் தேவைப் படுகிறது.,
அன்பு வயப்பட்ட இருவர் ( நண்பர்கள் /காதலர்கள் ) பேசும் போது
சத்தம் போட்டு பேச அவசியம் இருக்காது ,ஏனெனில் அவர்களின் இதயத்துக்கு இடையே ஆன தூரம் மிக குறைந்து விடுகிறது.
மனமொத்த காதலர்கள் பேச வேண்டிய அவசியம் கூட இருப்பதில்லை , ஒருவர் முனுமுணுத்தாலே, மற்றவர் புரிந்து கொள்வார். ஏனெனில் அங்கு இதயங்களுக்கு இடையே இடைவெளியே இருக்காது .
இறுதியாக இதய பரிமாற்றம் செய்து கொண்ட காதலர்களுக்கு ,வார்த்தை பரிமாற்றமே தேவை படுவதில்லை .கண்களின் மூலமே பேசி கொள்கின்றனர்.

டிஸ்கி : விவாதங்களின் போது இதயங்களை தூரப் போகும் படியான வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள் ., மற்ற இதயங்களுக்கு செல்லும் பாதை ஒருவழிபாதை., ஒரு முறை தூரமாக சென்று விட்டால் ,மறுமுறை அருகில் வருவது கடினம்.,

எங்கேயோ படித்த கவிதை :
என் மௌனமே உனக்கு
புரியா விட்டால் ,
வார்த்தைகளால்
என்ன பயன் ?

10 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

ரொம்ப நாள் கழிச்சு அருமையான பதிவு.. இதைத்தான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன் நண்பா.. அசத்தல்..

சொல்லரசன் said...

//ஏனெனில் அங்கு இதயங்களுக்கு இடையே இடைவெளியே இருக்காது .//

நண்பா இதயத்தை பற்றி ஆராய்ச்சியை நடத்தியிருப்பிங்கபோல,அருமையான‌
பதிவு

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அண்ணா.......................,

சுந்தர் said...

//கார்த்திகைப் பாண்டியன் said...

ரொம்ப நாள் கழிச்சு அருமையான பதிவு.. இதைத்தான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன் நண்பா.. அசத்தல்..//
நேரிலும் வாழ்த்திய நட்புக்கு நன்றி .

//சொல்லரசன் said...

நண்பா இதயத்தை பற்றி ஆராய்ச்சியை நடத்தியிருப்பிங்கபோல,அருமையான‌
பதிவு//

நன்றி , அரசர், இதையே விருதாக எடுத்து கொள்கிறேன்.


//SUREஷ் (பழனியிலிருந்து) said...

அண்ணா.......................,//
என்ன டாக்டர் , ஒன்னும் சொல்லாம போய்ட்டாரு ..,

நிலாமதி said...

இணைந்த இதயங்கள் வார்த்தைகளால் பேசுவதில்லை கண் களால்
பேசிக்கொள்கின்றன . நிஜமான வரிகள். பாராட்டுக்கள்.

சுசி said...

நல்ல பதிவு சுந்தர்.
//" சரி, ஆனால் நம்மை கோபப் படுத்திய நபர் ,மிக அருகில் இருக்கும் போது , உரத்த குரலில் ,தடித்த வார்த்தைகளில் பேசுவதின் காரணமென்ன ?//
சபாஷ். சரியான கேள்வி.

ஆதவா said...

வாவ்வ்.... சபாஷ்!!

சில சமயம் கோபப்பட்டதற்குப் பின்னால் ஏன் கோபப்பட்டோம் என்பதை யோசித்திருக்கிறேன்.

இந்த அளவுக்கு இல்லை!!!

டிஸ்கியும் கவிதையும் அற்புதம்!!

Unknown said...

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, நிலாமதி ..,
நன்றி டாக்டர் சுசீ, ஆமா சொல்லுக்கு விருது கொடுத்து இருக்கீங்கலாமே ? அவர் சார்பாக நன்றி !

ரொம்ப நாள் கழிச்சு வந்ததுக்கு நன்றி ஆதவா

நேசமித்ரன் said...

நல்ல பதிவு சுந்தர்.

"உழவன்" "Uzhavan" said...

அட.. இதுல இவ்வளவு மேட்டர் இருக்கா.. சூப்பரப்பு :-)