Sunday, September 13, 2009

வாடகை சைக்கிள்பள்ளம், மேடு
காடு ,கழனி,
நீர் வற்றிய
ஆற்று மணல்வெளி ,
எல்லாவற்றையும்
நான் கடந்து செல்ல
உதவியது நீ !
நான் உயரங்களை
அடைய உதவிய
நீ, என் துயர
நேரங்களிலும்
உடனிருந்திருக்கிறாய் !
உன்னுடனே வெகு தூரம்
பயணித்தாலும்
நீ என்னுடையதில்லை ;
என் பயணம்
முடிந்த பின்
உன்னை
ஒப்படைத்து
செல்ல வேண்டும்

16 comments:

♠ ராஜு ♠ said...

இது சைக்கிளூக்கு மட்டுமில்லை.
வாடகைப் பொருட்கள் அனைத்திற்கும் பொருந்தும் போலயே..!
நல்லாருக்கு.

Anbu said...

:-))

ஜெரி ஈசானந்தா. said...

மனதுக்குள் இன்னும் சுழல்கிறது சைக்கிள்.

இராகவன் நைஜிரியா said...

அருமையான விசயத்தை அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள்.

சுந்தர் said...

நன்றி ராஜு,

சுந்தர் said...

நன்றி அன்பு,
நன்றி ஜெர்ரி ஐயா ! கவிஞர் பாராட்டுவது இரட்டிப்பு மகிழ்ச்சி !
நன்றி ராகவன் அண்ணா !

தேவன் மாயம் said...

இந்த உடல் ஒரு வாடகை சைக்கிள்!!- சே!! என்ன ஒரு சிந்தனை!!

தருமி said...

சொந்தமா ஒரு சைக்கிள் வாங்குங்கய்யா ...

உலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com) said...

அருமை.............எதார்த்தமான கவிதை

தொடருந்து எழுத வாழ்த்துக்கள்

சுசி said...

நல்லா எழுதி இருக்கீங்க சுந்தர்.

பிரியமுடன்...வசந்த் said...

நல்லா அழகா இருக்கு சுந்தர்

சுந்தர் said...

நன்றி தேவா சார், அதுவே தான் நான் சொல்ல வந்தது ...,
சொந்த சைக்கிள் கிடைக்கலையே தருமி ஐயா ! போகும் போது கொடுத்து விட்டு தானே செல்ல வேண்டும் .., !
நன்றி உலவு,
வாழ்த்துக்கு நன்றி சுசீ., வசந்த்..., உங்கள் ஆதரவே என்னை தொடர்ந்து எழுத தூண்டுகிறது !

கிருஷ்ணமூர்த்தி said...

நல்ல உருவகம்!

ஒரு ஆரோக்கியமான கவிதை! இன்னமும் கொஞ்சம் விரிவு படுத்தி யோசித்துப்பாருங்களேன்! வாடகைக்கு எடுத்தது சைக்கிளாக உருவகப் படுத்தின இந்த உடல் மட்டும் அல்ல, எண்ணங்கள், ஆசைகள் என்று சொல்கிறோம் இல்லையா, இதெல்லாம், நம்முடையது தானா?
இல்லை, நம்மையறியாமலேயே எங்கிருந்தோ நமக்குள் புகுந்து கொண்டு backseat driving என்று சொல்வோமே அப்படி நம்மை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றனவா?

பயணம் என்பதே கேள்விகள் தான்! கேள்விகள் நின்றுவிடும்போது பயணம் அங்கே முடிந்து விடுகிறது!

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

R.Gopi said...

நாம விடற மூச்சு காத்தே இரவல் தானே தல....

சைக்கிள் சவாரி நல்லா கீதுபா... ரொம்ப நாளைக்கப்புறம் போனதால இருக்கும்....

கலக்குங்க சுந்தர்...

இங்கேயும் வாங்க

வெற்றியின் விழுதுகள் – (பகுதி-7) http://edakumadaku.blogspot.com/2010/04/7.html

”எந்திரன்” - ஒரு எலெக்ட்ரிக் சந்திப்பு http://jokkiri.blogspot.com/2010/03/blog-post_31.html

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in