Tuesday, May 5, 2009

வென்று விட்டார் மதுரை வீரர் , வந்து வாழ்த்துங்க

இட்லி கடையிலிருந்து ஐ ஐ எம் போன சரத் மாதிரி, எங்க ஊரிலேயும் ஒரு வெற்றி வீரர் சாதிச்சிருக்கார். அவர் மதுரை அண்ணா நகரை சேர்ந்த திரு.வீரபாண்டியன் . படிக்கும் போது குடும்ப வறுமையின் காரணமாக பள்ளி விட்டு வந்த பின்பு தினமும் மாலை நாலு மணி முதல் இரவு பதினோரு மணி வரை புரோட்டா கடையில் வேலை பார்த்து கொண்டே படித்துள்ளார். மாநகராட்சி பள்ளியில் படித்து ,மாநில அளவில் புவியியல் பாடத்தில் முதலிடம் பெற்ற இவர் , லயோலா வில் பி ஏ முடித்திருக்கிறார். தற்போது ஐ.ஏ.எஸ். தேர்வில் தேசிய அளவில் ஐம்பத்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். சிறு வயதில் கலெக்டர் காரில் செல்வதை பார்த்து நானும் ஒரு நாள் கலெக்டர் ஆவேன் என்று கனவு கண்டுள்ளார், இந்த கலாம் கண்ட மாணவர். இன்று கனவினை நனவாக்கி உள்ளார். தாம் படித்த பள்ளிகளுக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை தேடி தந்துள்ளார். இன்றைய மாணவர்களும் ,அவர்கள் பெற்றோர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்தி ஒன்று இதில் உள்ளது . அதிகமாக பணம் கேட்கும் ஆங்கில வழி கல்வி முறை தான் சிறந்தது என்பது தவறு. மற்றும் வறுமை ஒருவனது லட்சியத்துக்கு தடை கல்லாக இருக்க முடியாது. வாழ்க வீரபாண்டியன் ஐ.ஏ .எஸ். , சிறக்கட்டும் அவரது பணி.....,

15 comments:

KRICONS said...

அந்த IASக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்

Raju said...

நம்ம ஊருக்கார கலெக்டருக்கு வாழ்த்துக்கள்..!

தீப்பெட்டி said...

///வீரபாண்டியன் ஐ.ஏ .எஸ். , சிறக்கட்டும் அவரது பணி.....,///

வாழ்த்துகள் வீரபாண்டியன் ஐ.ஏ.எஸ்

கண்ணா.. said...

// மாநகராட்சி பள்ளியில் படித்து //

வறுமையை தாண்டி சாதித்தவர்கள் பாராட்ட பட வேண்டியவர்கள்..

இதில் பல வசதிகள் கிடைத்தும் வீணாபோன என் போன்றோருக்குதான் அதன் அர்த்தம் புரியும்

வாழ்த்துக்கள்....

மிக நல்ல பதிவு...

Suresh said...

வாழ்த்துகள் மச்சி அவருக்கும் அதை சொன்ன உனக்கும்

Unknown said...

வாழ்த்துகள் IAS

மனமார்ந்த வாழ்த்துகள்

sarathy said...

நல்ல பதிவு..

குப்பன்.யாஹூ said...

very happy and proud to hear this,. Thanks for the post.

My sincere wishes to Mr.Veerapandian IAS.

சுந்தர் said...

kricons,kanna,sarathy ,குப்பன் யாஹூ , டக்ளஸ்,தீப்பெட்டி, என்பக்கம் , தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் கோடானு கோடி நன்றிகள்.எல்லா புகழும் சக்கரைக்கே.

Rammohan said...

வாழ்த்துக்கள்...என்று ஒற்றை வார்த்தையில் சொல்லி விட முடியாது...உழைப்பு, நம்பிக்கை என்றுமே கை கொடுகும் என்பதற்கு மேலும் ஒரு சிறந்த உதாரணம்..

சுந்தர் said...

வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி, ராம் மோகன்

தருமி said...

நான்கூட எழுதணும்னு நினச்சேன். நீங்க செஞ்சிட்டீங்க...

நல்லது.

வாழ்த்து அவருக்கு.

cheena (சீனா) said...

உயர்திரு வீர பாண்டியன் அவர்களுக்கு பாராட்டுகளுடன் கூடிய நல்வாழ்த்துகள்

அருமையான இடுகை சுந்தர் - தகவலைப் பகிரும் முறை நன்று

வென்று விட்டார் மதுரை வீரர் - எங்களுக்குப் புரியுது

வீரபாண்டியன் said...

Vaazhthiya anaivarukkum nencharntha nanrikal...

தருமி said...

வாழ்த்துக்கள்.

வளர்க