Wednesday, May 6, 2009

கம்யூனிஸ்ட் பிரச்சாரத்தில் நமீதா ................

நம்ம ஊர்ல ( அதாங்க மதுரை ) நேத்து , மீனாக்ஷி அம்மன் தேரோட்டம் நடந்ததால், இரவு வழக்கத்தை விட பெரிய டிராபிக் ஜாம் அதனால நெல்பேட்டை அருகே நடந்த கம்யூனிஸ்ட் பிரசார கூட்டத்தை கவனிக்கிற மாதிரி ஆகிடுச்சி. வில்லுபாட்டு ஸ்டைல் ல ரெண்டு பேரு பேசிகிட்டும் , பாடிக்கிட்டும் இருந்தாங்க. சரி தோழர்கள் மின்வெட்டு, இலங்கை பிரச்னை, அணு ஆயுத ஒப்பந்தம் இத பத்தி ஏதாவது சொல்லுவாங்க அப்டின்னு பார்த்தால், மானாட மயிலாட ,வில,நமிதா ன்னு ஒரு பொண்ணு வரும், அது டவுசர் போட்டு வரும் ,சேலை கட்ட தெரியாது,அப்டி இப்டின்னு இருவது நிமிஷம் பேசினாங்க . அதுக்குள்ளே டிராபிக் கொஞ்சம் கிளியர் ஆனதால நான் கிளம்பிட்டேன். ஒரு கதை ஒன்று என் நினைவிற்கு வந்தது.ஒரு துறவி தன் சீடர்களிடம் சொன்னாராம், துறவறத்தில் இருக்கும் நாம் எந்த பெண்களையும் தொடக் கூடாது என்று. ஒரு நாள் அந்த துறவியும் , சீடர்களும் ஒரு ஆற்றை கடந்து செல்ல நேர்ந்தது. திடீரென ஆற்றில் வெள்ளம் வந்து , அதில் ஒரு பெண் அடித்து செல்லப் பட்டு கொண்டிருந்தாள். உடனே அந்த துறவி சற்றும் தாமதிக்காமல் ஆற்றில் நீந்தி சென்று அந்த பெண்ணை காப்பாற்றி கரை சேர்த்து விட்டு சீடர்களுடன் பயணத்தை தொடர்ந்தார். ஒரு சீடன் மிகுந்த குழப்பத்துடனே வந்து கொண்டு இருந்தான் , கொஞ்ச நேரம் கழித்து துறவியிடம் கேட்டானாம்,பெண்களை தொட கூடாது என்று சொல்லி விட்டு ,நீங்கள் மட்டும் ஒரு பெண்ணை தொடலாமா ? இது தவறில்லையா? என்றானாம் . துறவி, நான் ஆற்றங்கரையிலேயே அந்த பெண்ணை இறக்கி விட்டேன். ஆனால் நீ இப்போது வரை அப்பெண்ணை உன் நினைவில் தூக்கி வந்து கொண்டிருக்கிறாய் என்று முடித்தார். இந்த கதைக்கும் , தோழர்கள் பிரச்சாரத்துக்கும் என்ன சம்மந்தம் என்கிறீர்களா ?. கலைஞர் டிவி ல, நமீதா வந்தது, போனது எப்போவோ முடிஞ்சு போன விஷயம் , ஆனா , இன்னமும் நமீதா வை மனசில தூக்கி கொண்டே செல்லும் நம் தோழர்கள் அந்த சீடனை போல . வாழ்க கம்யுனிசம், வளர்க நமீதா புகழ்.

4 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

இன்னைக்கு முக்காவாசி பயபுள்ளைங்க இப்படித்தான்ப்பா திரியுதுங்க

கார்த்திகைப் பாண்டியன் said...

மே 24 மதுரைல பதிவர் சந்திப்பு இருந்தாலும் இருக்கும் நண்பா.. முடிஞ்சா எனக்கு தனிமடல் அனுப்புங்க.. இல்லைன்னா எனக்கு போன் பண்ணுங்க.. பேசுவோம்

Raju said...

வளர்க நமீதா புகழ்...!

cheena (சீனா) said...

ஆமா உண்மை உண்மை - மறக்க வேண்டிய பல நிக்ழ்வுகளையும் சொற்களையும் நாம் மனதில் நினைத்துக் கொண்டு கவலைப்படுகிறோம். என்ன செய்வது ......

நல்லாருக்கு சுந்தர்