1. குப்புறப்படுத்து தூங்குபவர்கள், சோம்பேறித்தனம் மிகுதியாக உள்ளவர்கள்: உழைப்பில் ஆர்வம் இல்லாதவர்கள்: தங்கள் வேலையின் மீது பற்று இன்றி இருப்பர்.
2.சுருண்டு படுத்து உறங்குபவர்கள், கோழைகள் : எப்போதும் , எதற்கும், எதிலும் பிறர் ஆதரவை நாடி நிற்பவர்கள்.
3. மல்லாந்து படுத்து உறங்குபவர்கள் , தன்னம்பிக்கை மிக்கவர்கள் ,பொது நலனில் அக்கறை கொண்டவர்கள் ; பிறரை எளிதில் கவரும் ஆற்றல் கொண்டவர்கள் !
----- இவ்வாறு கூறுகிறது. இதில் நீங்கள் எந்த ரகம் ?முதல் இரண்டு ரகமாக இருந்தால் , இன்றிலிருந்து மல்லாந்து படுத்து பாருங்கள் .
அதே போல ஒருவர் பேசும் போது செய்யும் சேஷ்டை களில் இருந்து அவரது குணம் இவ்வாறு இருக்கும் என கூறுகிறது .,
1.நின்று கொண்டு பேசும் போது தலையை விரல்களால் சொறிந்தபடி நிற்பவர்கள் -- ஞாபக மறதிக் காரர்கள் .
2.விரல் நகத்தை கடித்து கொண்டே பேசுபவர்கள், எந்த காரியத்தையும் அதிக நேரம் எடுத்து கொண்டு செய்யும் ----- சுருசுருப்பில்லாதவர்கள்.
3. சட்டைப் பித்தானை திருகிக் கொண்டே பேசுபவர்கள் ,== தன்னம்பிக்கை இல்லாதவர்கள்.
4.பக்கத்தில் உள்ள டேபிள் மீதோ , சேர் மீதோ விரலால் தட்டிக் கொண்டே பேசுபவர்கள் ------ அலட்சிய மனோ பாவம் உள்ளவர்கள்.
5.விரலை மடக்கி உள்ளங்கையால் தேய்த்த படி பேசுபவர்கள் ,------ பயந்த சுபாவம் உள்ளவர்கள் ...
இப்படி போகிறது , அந்த ஆராய்ச்சி குறிப்பு, இது உங்களுக்கு ஏற்புடையதாக உள்ளதா ? உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.
16 comments:
self analysis? நான் எதுல வரேன்னு சொல்ல மாட்டேனே.. :-)
Raittu...!
ஒரே எதிர் மறையா இருக்கே
நமக்கு ஒன்னும் இல்ல............
இதுக்கு பேரு analysis-ஆ? கை ரேகை ஜோசியம் பாக்கிற மாதிரி எல்லாருக்கும் எல்லாம் செட் ஆகிற மாதிரி ஒரு analysis. பொதுவா எல்லாருமே படுக்கும்போது மல்லாக்கதான் படுப்போம், அப்புறம் கொஞ்ச நேரங்கழிச்சு குளிருச்சுனா சுருண்டு படுப்போம், அப்புறம் கொஞ்சம் ஒரு மாதிரி இருந்துச்சுனா குப்புற படுப்போம்....
--ராஜா
//ஒரே எதிர் மறையா இருக்கே
நமக்கு ஒன்னும் இல்ல//............
அதுக்குதாண்ணே, மல்லாந்து படுங்க .
வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி, டக்ளசு,கார்த்திகை ,வசந்த்
ஒரே எதிர் மறையா இருக்கே
நமக்கு ஒன்னும் இல்ல............
இங்கிலாந்துலதானே இந்தியால இல்லையே
ரூம் போட்டு யோசிச்ச உங்கள....
மண்டபம் போட்டு சாத்தலாமுன்னு, சாரி...
வாழ்த்தலாமுன்னு பதிவுலகம் சார்பா நினைக்கிறோம்.
ரூம் போட்டு யோசிச்ச உங்கள....
மண்டபம் போட்டு சாத்தலாமுன்னு, சாரி...
வாழ்த்தலாமுன்னு பதிவுலகம் சார்பா நினைக்கிறோம்.
தன் மகனை நனைய விடாமல் தடுத்து தான் நனையும் தாய் - அன்னையர் தின வாழ்த்துகள் - 2009
எல்லா நிலையிலும் சேர்ந்து அதாவது குப்புற, சுருண்டு, மல்லாந்து படுத்தா என்ன வகையாம்.. அத்தையும் சொல்ட்டுப் போ சார்....
நல்லா தான் இருக்கு ;)
நாமெல்லாம் சேர்ந்து ஒரு இப்படி ஒரு ஆராய்ச்சி பண்ணலாம் தல....
ஆராய்ய்சிகளின் முடிவுகள் ஆராய்ந்தவருக்கே உதவும் - மற்ற படி ஒரு பயனும் இல்லை
கரெக்ட்.. நான் குப்புற படுத்து தான் தூங்குவேன்..
//♫சோம்பேறி♫ said...
கரெக்ட்.. நான் குப்புற படுத்து தான் தூங்குவேன்..//
ரெண்டு மாசம் கழிச்சு பின்னூட்டம் இட்ட நீங்கள் கண்டிப்பாக குப்புற படுப்பவர்தான் ., வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சோம்பேறி
Post a Comment