Monday, May 11, 2009

வீர பாண்டி கோட்டையிலே....,

14 ஆம் நூற்றாண்டில் எங்க ஊர, வீரபாண்டியன் என்ற ராசா ஒருத்தர் ஆட்சி செஞ்சுகிட்டு வந்தாராம். அப்போ அவருக்கு திடீர்னு நோவு வந்து, ரெண்டு கண்ணுலயும் பார்வை பறி போயிடுச்சாம் . அவரு பாக்காத வைத்தியம் இல்லே, போகாத கோவில் இல்லே, ஆனாலும் பார்வையே வரல. ரொம்ப மனசு ஒடஞ்சு போன ராசா, சரி, நாம இனி , பதவிய விட்டு விலகிட்டு, சாமியாரா போயிடுவோம் அப்டின்னு நினைச்சு தூங்கிட்டார். அப்போ அவரு கனவுல வந்த, சாமி ,நீ இப்படியே, வைகை கரையோரம் மேற்காலே நூறு கல் தொலைவு போனேன்னா , அங்கே '' நிம்பா ஆரண்யம் '' என்ற காட்டு பகுதி வரும், அங்கே நான் ஆற்றங்கரை ஓரம் சுயம்பு ஆக, எழுந்தருளியிருக்கிறேன்., மற்றும் அங்கே ஸ்ரீ கவுமாரி அம்மன் கோயில் உள்ளது . அங்கே போய் கும்பிட்டா உனக்கு திரும்ப பார்வை கிடைக்கும் னு, சொன்னாரு. உடனே அந்த ராசா, அந்த காட்டுக்கு வந்து ஆத்துல குளிச்சுட்டு, அம்மனை போய் மனமுருக வேண்டினார். உடனே அவருக்கு ஒரு கண்ணில் பார்வை வந்துடுச்சி. பிறவு, ஆற்றங்கரையோரம் லிங்க வடிவில் தானே எழுந்தருளியிருந்த சிவ பெருமானை வணங்கினார்., உடனே அவருக்கு ரெண்டாவது கண்ணுலேயும் , பார்வை வந்துச்சாம். மிக்க மகிழ்ந்த ராசா, அந்த லிங்கத்தை , ஸ்ரீ கண்ணிச்வரமுடையார் கோயில் என்ற பேரில் அழகான ஒரு கோவிலை ஆத்தங்கரை ஓரமா கட்டினார். பொறவு அந்த இடமே அந்த ராசா பேரால, வீரபாண்டி ன்னு ஆகி போச்சு.

அந்த கோவில்ல ஒவ்வொரு சித்திரை கடைசி செவ்வாய் கிழமை லேந்து , எட்டு நாள் ரொம்ப சிறப்பான திருவிழா நடக்கும். அதன் படி , நாளக்கி இந்த வருஷ விழா ஆரம்பிக்குது. அக்கினி சட்டி எடுப்பது, என்பது இங்க ரொம்ப பிரபலம். நெறைய ஊர்ல பல நாள் திருவிழா நடந்தா கூட ஒரு நாள் தான் அக்கினி சட்டி எடுப்பார்கள். ஆனால் இங்கே எட்டு நாளும் ராத்திரியும், பகலும் அக்கினி சட்டி எடுப்பார்கள்.  
சக்தி வாய்ந்த இந்த அம்மனிடம் நேர்த்திக்கடன் செலுத்துதல் மிக முக்கிய நடைமுறை. தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்பங்களிலும், யாராவது, ஒரு உறவினரோ, நண்பரோ, இங்கு அக்கினி சட்டி எடுக்காமல் பார்ப்பது அரிது.,மற்றவர்கள் அவரவர் வசதிக்கேற்ப, மாவிளக்கு எடுத்தல், ஆயிரம் கண் விளக்கெடுத்தல், மொட்டை போடுதல் , போன்ற பிரார்த்தனைகளில் ஈடு படுவர்.
அதே போல திருவிழா இல்லாத சமயங்களிலும் ,முகூர்த்த நாட்களில் திருமணங்கள் ஏராளமாக நடை பெறும். 
மதுரை ல ஓடுற ( ? ) வைகை ஆத்துக்கு முக்கிய ஆதாரமான முல்லை ஆறு இங்கே குளிக்க கூடிய அளவில் , சுத்தமாகவும், சுகாதாரமாகவும் ஓடுகின்றது. மதுரை லே இருந்து மேற்காலே 83KM தொலைவில இருக்கு. தேனி ல இருந்து கம்பம் போற ரோட் ல ஏழு கி. மீ. ல இருக்கு. தங்கும் வசதி எதுவும் இல்லை, தேனி க்குதான் வரணும். எட்டு நாள்ல உங்களுக்கு வசதி படுற ஒரு நாள் இங்க வந்து அம்மனையும், ஈசனையும், தரிசித்து அருள் பெறுங்கள்.

11 comments:

Raju said...

ஒடுற (?) வைகையை ரசித்தேன்..!

கார்த்திகைப் பாண்டியன் said...

கதை நல்லாத்தான்யா இருக்கு.. வீரபாண்டித் திருவிழா ஆரம்பமா? ஜமாயுங்க..

Suresh said...

நல்லா இருக்கு ;)

ப்ரியமுடன் வசந்த் said...

நம்ம ஊருக்கதை

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தமிழ் மணத்தில் முதல் ஓட்டினையும், தமிழீலிஷில் ஆறாவது ஓட்டினையும் போட்டுவிட்டேன் தல

Thamiz Priyan said...

அட.. நம்ம ஊரு ஆளு... வாழ்த்துக்கள்ங்க!

தேவன் மாயம் said...

கதை நல்லா இருக்கு!!

சுந்தர் said...

வந்து, வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

Unknown said...

anna namma ooru kathai sonnathuku remba santhosam.

Unknown said...

தரிசிச்சாப் போச்சு.பண்ணிடலாம்.

cheena (சீனா) said...

போய்ய்ட்டு வந்தீங்களா - திருவிழா நல்லா இருந்திச்சா