நேபாள நாட்டு விமான நிலையத்தில் ஊழியர்கள் சரமாரியாக லஞ்சம் வாங்குவதைத்
தடுக்க ஊழியர்களுக்கு பாக்கெட்களே இல்லாத பேன்ட்களை கொடுக்க அந்த நாட்டு ஊழல் ஒழிப்பு
வாரியம் திட்டமிட்டுள்ளதாம்.
நேபாள நாட்டில் ஒரே ஒரு விமான நிலையம்தான் உள்ளது. தலைநகர் காத்மாண்டுவில் உள்ள
திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஊழியர்கள், பயணிகளிடம் பெருமளவில் லஞ்சம்
வாங்குவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
இதை ஒழிக்க தற்போது வித்தியாசமான ஐடியாவை உருவாக்கியுள்ளது நேபாள லஞ்ச ஒழிப்பு வாரியம்.
இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஐஸ்வரி பிரசாத் பெளத்யால் கூறுகையில்,
பெருமளவில் புகார்கள் வந்ததால் கண்காணிப்புக் குழுவை விமான நிலையத்திற்கு அனுப்பினோம்.
அதில் லஞ்சம் வாங்குவது உண்மை என்று தெரிய வந்தது.
இதையடுத்து விமான நிலைய ஊழியர்களுக்கு பாக்கெட்டே இல்லாத பேன்ட்களைக் கொடுக்க முடிவு
செய்துள்ளோம். இதுதொடர்பாக விமானப் போக்குவரத்துத் துறைக்கு பரிந்துரையை
அனுப்பியுள்ளோம். விரைவில் இது நடைமுறைக்கு வரும்.
இதன் மூலம் ஓரளவு லஞ்சம் குறையும் என நம்புகிறோம். இதற்கும் ஊழியர்கள் கட்டுப்படாவிட்டால்
அவர்களை வேலையிலிருந்து நீக்குவது ஒன்றுதான் வழி என்றார்.
நேபாள நாட்டின் முக்கியத் தொழிலே சுற்றுலாதான். இங்கு 3 லட்சம் பேர் சுற்றுலாவை நம்பி
உள்ளனர்.
கடந்த ஆண்டு நேபாளத்திற்கு 4.50 லட்சம் பேர் சுற்றுலா வந்தனர். இந்த ஆண்டு 10 லட்சம் பேரை
ஈர்க்க நேபாளம் திட்டமிட்டுள்ளது. ஆனால் விமான நிலையத்தில் நிலவும் இந்த லஞ்சப் பேயால்
பயணிகள் பெருமளவில் அதிருப்திக்குள்ளாவதாக புகார்கள் குவிந்ததைத் தொடர்ந்து அவர்களது
பாக்கெட்டில் கை வைத்துள்ளது அரசு.
11 comments:
நல்ல யோசனை :-) இத நம்ம ஊர்ல நடைமுறைப் படுத்தினா எப்படி இருக்கும்?
:-)
நம்ம ஊர்லயையும் இப்படி ஏதாவது பண்ணுங்கப்பா..
// தடுக்க ஊழியர்களுக்கு பாக்கெட்களே இல்லாத பேன்ட்களை கொடுக்க அந்த நாட்டு ஊழல் ஒழிப்பு//
ஆனா ஜட்டி போடகூடாதுன்னு ஆர்டர் போடவில்லையே!!!!!!!!!!
பாக்கெட்லதான் பணத்தை வைக்கமுடியுமா என்ன,??
ஆனா ஜட்டி போடகூடாதுன்னு ஆர்டர் போடவில்லையே!!!!!!!!!!
பாக்கெட்லதான் பணத்தை வைக்கமுடியுமா என்ன,??
Repeat.
ஆனா ஜட்டி போடகூடாதுன்னு ஆர்டர் போடவில்லையே!!!!!!!!!!
பாக்கெட்லதான் பணத்தை வைக்கமுடியுமா என்ன,??
Repeatttukku Repeattu..
வாங்க செந்தி வேலன் , நம்ம ஊர்ல கூட கொண்டு வரலாம் ,
அன்பு, smiley விட்டு, ஒரு வரி / வார்த்தை அட்லீஸ்ட் ஒரு எழுத்தாவது எழுதுங்க தம்பி.
சரிங்க கா.பா. நம்ம ஊருலேயும் பண்ணுவோம்.
வாங்க சொல் அரசர்., எப்பிடி இப்பிடியெல்லாம் .., இதுனாலதான் நம்ம ஊருல இந்த சட்டம் வரல .,
ஆதவா, நீங்க எங்கே வைக்குறீங்க ?
ஸ்ரீ, டக்ளஸ், மீண்டும் மீண்டும் வருக ! ரிபீட்டு ....,
நம்ம ஆளுங்க கிட்டவா? நடக்குமா இது? நல்லவனுக்கு ஒரு வழி. கெட்டவனுக்கு???
அப்போ நம்ம பரத்தும் இனி பாக்கெட்டில்லா டீ ஷர்ட்டோடதான் திரிவாரோ?
hi i know u r very small boy.........
thanx 4 u r command
shiyamsena
free-funnyworld.blogspot.com
பாக்கெட் இருந்தாலும் பரவாயில்லை!! பணத்தை பாக்கெட் இல்லாட்டி பாண்டுக்குள்ளேயே சொருகிக்குவாங்க நம்ம மக்கள்!!
Post a Comment